சுந்தரர் (பொன்னைத் திருவாரூரில் வருவித்துத் தந்தருள விண்ணப்பித்தல்):

முதுகுன்ற இறைவர் பன்னீராயிரம் பொன் அருள, சுந்தரனார் நிலமிசை வீழ்ந்துப் பணிந்தெழுந்து, சிவலிங்கத் திருமேனிக்கு இன்னமும் அருகாகச் சென்று 'பெருமானே, இப்பொற்குவியல்களைத் திருவாரூரிலுள்ளோர் யாவரும் அதிசயிக்குமாறு அவ்விடத்தில் வருவித்துத் தந்தருள வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்றார். ஆதி மூர்த்தியும் அசரீரியாய் 'ஆரூரனே! இப்பொருளை இங்குள்ள மணிமுத்தாற்றிலிட்டுத் திருவாரூர்க் குளத்தினின்றும் பெற்றுக் கொள்வாய்' என்றருள் புரிகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 108):
அருளும் இக்கனகமெல்லாம் அடியனேற்கு ஆரூருள்ளோர்
மருளுற வியப்ப அங்கே வரப்பெற வேண்டும் என்னத்
தெருளுற எழுந்த வாக்கால் செழுமணி முத்தாற்றிட்டிப்
பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்திற்போய்க் கொள்க என்றார்

No comments:

Post a Comment