தெய்வீகக் காதலர் இருவரின் பிரிவுத் துயராகிய இருளும், இரவுப் பொழுதின் இருளும் ஒருசேர நீங்குமாறுப் புலர்ந்த அன்றைய காலைப் பொழுதில், ஆரூர் வாழ் அடியவர்கள் தியாகேசப் பெருமானின் திருவருளை வியந்து போற்றியவாறு, நாவலூர் வேந்தரான சுந்தரர் மகிழும் வண்ணம், பரவையாருடனான திருமண வேள்வியினைச் சிறப்புற நிகழ்த்தி மகிழ்கின்றனர்,
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 326):
காமத் துயரில் கவல்வார் நெஞ்சில் கரையில் இருளும் கங்குற் கழிபோம்
யாமத்(து) இருளும் புலரக் கதிரோன் எழுகாலையில் வந்தடியார் கூடிச்
சேமத் துணையாம் அவர் பேரருளைத் தொழுதே திருநாவலர்கோன் மகிழத்
தாமக் குழலாள் பரவை வதுவை தகுநீர்மையினால் நிகழச் செய்தார்

No comments:
Post a Comment