சுந்தரர் (பரவையார் மற்றும் சங்கிலியார் திருக்கயிலை சேர்தல்):

சுந்தரர் திருக்கயிலை ஏகிய பின்னர், திருத்தொண்டின் நெறிபேணும் பரவையாரும்; சங்கிலியாரும் தத்தமது வல்வினைத் தொடர்பு நிறைவுறும் கால அளவில், இறைவரின் இடபாகத்தில் கோயில் கொண்டருளும் அம்மையின் திருவருளால் மீளவும் திருக்கயிலை சார்ந்து, கமலினி; அனிந்திதை எனும் முந்தைய நிலையை ஏற்று, உமையன்னைக்கு அணுக்கத் தொண்டு புரியும் பெருவாழ்வினைப் பெறுகின்றனர், 

(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 50):
தலத்து வந்துமுன் உதயம்செய் பரவையார் சங்கிலியாரென்னும்
நலத்தின் மிக்கவர் வல்வினைத் தொடக்கற நாயகி அருளாலே
அலத்த மெல்லடிக் கமலினியாருடன் அனிந்திதையாராகி
மலைத் தனிப் பெருமான் மகள் கோயிலில் தம்தொழில் வழிநின்றார்

No comments:

Post a Comment