(1)
சுந்தரனாரின் வளர்ப்புத் தந்தை 'நாடுவாழ் அரசர்' என்று சேய்மைத் தன்மையில் பெரிய புராண ஆசிரியர் குறித்திருப்பதை முதற்கண் சிந்தித்துத் தெளிதல் வேண்டும். நாயன்மார்களுள் ஒருவரெனில் சேக்கிழார் பெருமானார் இவ்விதமாய்க் குறித்திருக்க ஒருசிறிதும் வாய்ப்பில்லை.
(திருமலைச்சருக்கம் - திருப்பாடல் 151)
நரசிங்க முனையர் என்னும் நாடுவாழ் அரசர் கண்டு
பரவரும் காதல் கூர பயந்தவர் தம்பால் சென்று
விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்றுத் தங்கள்
அரசிளம் குமரற்கேற்ப அன்பினால் மகன்மை கொண்டார்
(2)
நாயன்மாராகப் போற்றப் பெறும் 'நரசிங்க முனையரையருக்கும்', சுந்தரரின் வளர்ப்புத் தந்தையான 'நரசிங்க முனையருக்கும்' உள்ள சிறு பெயர் ஒற்றுமையைக் கொண்டு ஒரு முடிவுக்கு வருவது பெரும் பிழை. இருவரையுமே திருமுனைப்பாடி நாட்டு மன்னர் என்றே பெரிய புராணம் பதிவு செய்திருந்தாலும், நரசிங்க முனையரையரின் புராணத்தில் இடம்பெறும் 9 திருப்பாடல்களிலும் சுந்தரரைப் பற்றிய யாதொரு குறிப்புமில்லை. 'பெரிய புராணக் காவிய நாயகரான நம் சுந்தரரை வளர்த்திருந்தவர் எனில் சர்வ நிச்சயமாய் தெய்வச் சேக்கிழார் அக்குறிப்பினைக் கடந்து சென்றிருக்க வாய்ப்பில்லை' என்பது தெளிவு.
(3)
சேக்கிழார் அடிகளுக்கு முன்னரே அவதரித்திருந்த நம்பியாண்டார் நம்பிகளும் தம்முடைய திருத்தொண்டர் திருவந்தாதியில் 'நரசிங்க முனையரைய நாயனார் சுந்தரரை வளர்த்ததாக எவ்விதக் குறிப்பையும் பதிவு செய்யவில்லை'. ஆதலின் 'சுந்தரரின் காலத்திற்கு முன்னரே நரசிங்க முனையரையர் எனும் நாயனார் அரச குலத்தில் அவதரித்துச் சிறப்புற்று விளங்கியிருந்தார்' என்றும் 'நரசிங்க முனையர் என்பார் அம்மரபில் பின்னாளில் தோன்றியுள்ள சிற்றரசரே' என்றும் கொள்வதே ஏற்புடைய வாதம்.
(4)
சுந்தரனார் 'மெய்யடியான் நரசிங்க முனையரையற்கு அடியேன்' என்றும், திருநாவலூர் திருப்பதிகத்தின் இறுதிப் பாடலில் 'நரசிங்க முனையரையன் ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர்' என்றும் சேய்மைப் பதத்தில் குறித்துள்ள தன்மையையும் சிந்தித்தல் வேண்டும். சிறு பிராயத்திலிருந்தே வளர்த்து வளர்த்துள்ள அன்புக்குரிய தந்தையெனில் தன்னுடன் தொடர்பு படுத்தியன்றோ குறித்திருப்பார். சடையனார்; இசைஞானியரை அனைத்து திருப்பதிகங்களிலும் தம்முடன் இணைத்து, 'சடையனார் சிறுவன்; இசைஞானி காதலன்' என்று குறித்து வந்துள்ளது கண்கூடு.
(5)
திருமுருக வாரியார் சுவாமிகள் உள்ளிட்ட சமய ஆச்சாரியர்கள் எந்தவொரு பெரியபுராண விரிவுரையிலும், நூல்களிலும் 'சுந்தரரின் வளர்ப்புத் தந்தை நாயன்மார்களுள் ஒருவர்' என்று பேசவில்லை; குறிக்கவில்லை. அருளாளர்களும்; ஆச்சார்யர்களும் பதிவு செய்திராத ஒரு குறிப்பை, நாமாக 'நமக்கின்று தோன்றியது' என்று தோற்றுவித்துப் பரப்புவதைத் தவிர்ப்போம் (மெய்ப்பொருள் காண்பது அறிவு).

No comments:
Post a Comment