வேளாண் மரபினரான 'குண்டையூர் கிழார்' என்பார் சுந்தரனாரின் மீது அதீத அன்பும் பக்தியும் பூண்டொழுகும் பண்பினர். தம்பிரான் தோழருக்கு நாள்தோறும் திருவமுது அமைக்கும் பொருட்டு, செந்நெல்; பருப்பு; சர்க்கரை முதலிய பல்வேறு வளங்களைப் பரவையாரின் திருமாளிகைக்கு அனுப்புவிக்கும் திருத்தொண்டினை இடையறாது புரிந்து வருகின்றார்.
ஒரு சமயம் மழையின்மையால் விளைச்சல் பெரிதும் குன்ற, கிழாரால் போதுமான உணவுப் பொருட்களை வன்தொண்டனாருக்கு அனுப்ப இயலாது போகின்றது. திருத்தொண்டு தடையுற்றதால் உளம் வெதும்பி, உணவும் உட்கொள்ளாது தாங்கொணாத் துயருடன் துயில் கொள்ளும் கிழாரின் கனவில் எழுந்தருளும் கோளிலிப் பரம்பொருள் 'ஆரூரனுக்குத் தருதற் பொருட்டு உனக்கு நெல் தந்தோம்' என்றருள் புரிகின்றார்.
ஆதி மூர்த்தியின் ஏவலால் நிதிக் கோமானான குபேரனார் அப்பகுதியின் எல்லை வரையிலும், விண்ணை எட்டும் அளவிற்கான நெல்மலைகளைக் கொணர்ந்துக் குவிக்கின்றார்,
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 14):
ஆரூரன் தனக்குஉன்பால் நெல்தந்தோம் என்றருளி
நீரூரும் சடைமுடியார் நிதிக்கோமான் தனைஏவப்
பேரூர் மற்றதன்எல்லை அடங்கவும்நெல் மலைப்பிறங்கல்
காரூரும் நெடுவிசும்பும் கரக்க நிறைந்தோங்கியதால்

No comments:
Post a Comment