(1)
சுந்தரர் திருமுதுகுன்றத்தினைச் சென்றடைகின்றார், ஆலயக் கருவறையுள் விருத்தகிரீஸ்வரப் பரம்பொருளைக் கண்களாரத் தரிசித்து, நிலமிசை வீழ்ந்துப் பணிந்துப் பின் பொன் வேண்டும் குறிப்புடன் 'நஞ்சியிடை' எனும் திருப்பதிகத்தினால் போற்றி செய்கின்றார்,
-
நஞ்சிஇடை இன்று நாளை என்றும்மை நச்சுவார்
துஞ்சியிட்டால் பின்னைச் செய்வதென் அடிகேள்சொலீர்
பஞ்சியிடப் புட்டில் கீறுமோ, பணியீர் அருள்
முஞ்சியிடைச் சங்கம் ஆர்க்குஞ் சீர்முதுகுன்றரே
(2)
முதுகுன்றத்துறைப் பரம்பொருள் பொன்னை அருளவிருக்கிறார் என்பதனைத் திருவருட் குறிப்பினால் உணரப் பெறும் தம்பிரான் தோழர் 'மெய்யை முற்றப் பொடிப் பூசியோர் நம்பி' எனும் மற்றுமொரு திருப்பதிகத்தினால் முக்கண் முதல்வரைப் போற்றுகின்றார்,
-
மெய்யை முற்றப் பொடிப் பூசியொர் நம்பி
வேதம் நான்கும் விரித்தோதியொர் நம்பி
கையில்ஓர் வெண்மழு ஏந்தியொர் நம்பி
கண்ணும் மூன்றுடையான் ஒரு நம்பி
செய்ய நம்பி, சிறு செஞ்சடை நம்பி
திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்த நம்பி, என்னை ஆளுடை நம்பி
எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே
(3)
குளிர்பிறை அணிந்தருளும் செஞ்சடைக் கடவுள் வன்தொண்டரின் தீந்தமிழ்ப் பனுவல்களால் திருவுள்ளம் மகிழ்ந்தருளிப் பன்னீராயிரம் பொன்னினை அளித்தருள் புரிகின்றார்.

No comments:
Post a Comment