சுந்தரர் (காஞ்சிபுர எல்லையில் திருவாரூரை நினைந்துருகிப் பாடுதல்):

சுந்தரர், காஞ்சீபுரத்தில் ஏகாம்பரேஸ்வரப் பரம்பொருளின் திருவருளால் இடக்கண் பார்வை பெற்று, அப்பதியிலேயே சில தினங்கள் எழுந்தருளி இருக்கின்றார். பின்னர் காமாஷி அன்னையை இடபாகத்தே கொண்டருளும் ஏகம்ப அண்ணலிடம் விடை பெற்று, அடியவர்களும் உடன்வர, காஞ்சி மாநகரின் எல்லையைக் கடந்து செல்கின்றார். அச்சமயத்தில் ஆரூர் தலத்தினை நினைந்துருகி, 'எமை ஆளுடைய தியாகேசப் பெருமானை மீண்டும் திருவாரூரில் என்று தரிசிக்கப் பெறுவேனோ?' என்று பெரிதும் ஏங்கிப் பாடுகின்றார்,
-
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி
முந்தி எழும் பழைய வல்வினை மூடாமுன்
சிந்தை பராமரியாத் தென் திருவாரூர்புக்(கு) 
எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே

No comments:

Post a Comment