சுந்தரர் (கழுக்குன்ற தரிசனம்):

திருக்கழுக்குன்றத்திலுள்ள அடியவர்கள் ஆறாத அன்பினோடு எதிர்கொண்டு வணங்கிப் போற்ற, அடிவாரத்திலுள்ள தாழக் கோயிலில் பக்தவத்சலேஸ்வர மூர்த்தியையும், மலைக்கோயிலில் வேதகிரீஸ்வரப் பரம்பொருளையும் தரிசித்துத் தொழுது, 'சென்று சென்று தொழுமின்' என்று திருப்பதிகத்தினால் போற்றுகின்றார் தம்பிரான் தோழர், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 173):
தேனார்ந்த மலர்ச்சோலை திருக்கழுக்குன்றத்து அடியார்
ஆனாத விருப்பினொடும் எதிர்கொள்ள அடைந்தருளித்
தூநாள்வெண் மதியணிந்த சுடர்க்கொழுந்தைத் தொழுதிறைஞ்சிப்
பாநாடும் இன்னிசையின் திருப்பதிகம் பாடினார்

(சுந்தரர் தேவாரம் - திருக்கழுக்குன்றம் - திருப்பாடல் 1)
கொன்று செய்த கொடுமையால்பல சொல்லவே
நின்ற பாவ வினைகள் தாம்பல நீங்கவே
சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம்
கன்றினோடு பிடிசூழ் தண் கழுக்குன்றமே!!!

No comments:

Post a Comment