சுந்தரர் (திருநீற்றுப் பேழை தாங்கும் பெருவாழ்வு பெறுதல்):

திருக்கயிலை முதல்வர் பேரருள் புரிய, மாதவம் செய்த தென்திசை வாழவும்; தீதிலாத் திருத்தொண்டத் தொகையினை அருளிச் செய்யவும் மண்மிசை அவதரித்த நம் தலைவரான நம்பிகள், மீளவும் அணுக்கத் தொண்டரெனும் முந்தைய நிலையை ஏற்றுத் திருநீற்றுப் பேழை தாங்கும் பெருவாழ்வினைப் பெறுகின்றார்,

(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 49): 
அன்ன தன்மையில் இருவரும் பணிந்தெழுந்(து)அருள் தலைமேல்கொண்டு
மன்னும் வன்தொண்டர் ஆலால சுந்தரராகித் தாம் வழுவாத
முன்னை நல்வினைத் தொழில்தலை நின்றனர்; முதற்சேரர் பெருமானும்
நன்மை சேர் கணநாதராய் அவர்செயும் நயப்புறு தொழில்பூண்டார்

No comments:

Post a Comment