சுந்தரர் (ஒற்றியூரில் சங்கிலியாருடன் திருமண வைபவம்):

ஆதிப்பரம்பொருளான சிவபெருமான் ஒற்றியூர் வாழ் அன்பர்கள் கனவில் எழுந்தருளிச் சென்று, 'நம்பியாரூரனுக்கும் சங்கிலிக்கும் மண்ணவரும் விண்ணவரும் அறியுமாறு மணம் செய்விப்பீர்' என்று கட்டளையிட்டு அருள் புரிய, திருத்தொண்டர்களும் அக்கட்டளையினைச் சென்னிமேற் கொண்டு, தவத்திற் சிறந்த வன்தொண்டருக்கும் சங்கிலியாருக்கும் சிறப்புற திருமணம் செய்வித்து வணங்கி வாழ்த்தி மகிழ்கின்றனர்.  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 265)
நம்பியாரூரனுக்கு நங்கை சங்கிலி தன்னை
இம்பர் ஞாலத்திடை நம் ஏவலினால் மணவினைசெய்து 
உம்பர்வாழ் உலகறிய அளிப்பீர் என்றுணர்த்துதலும்
தம்பிரான் திருத்தொண்டர் அருள்தலைமேற் கொண்டெழுவார்

No comments:

Post a Comment