சுந்தரர் (மழபாடி வருவதற்கு நினைக்க மறந்தாயோ?):

 

சுந்தரனார் காவிரியின் வடகரையிலுள்ள திருவையாறு திருத்தலத்தினைத் தரிசித்துப் பின் தென்கரையிலுள்ள பூந்துருத்தி; திருவாலம்பொழில் முதலிய தலங்களைப் பணிந்து, ஆலம்பொழிலிலுள்ள திருமடமொன்றில் தங்கித் துயில் கொள்கின்றார். ஆலமுண்டருளும் ஆதி மூர்த்தி வன்தொண்டரின் கனவில் எழுந்தருளி வந்து 'மழபாடி வருவதற்கு நினைக்க மறந்தாயோ?' என்று அருள் புரிகின்றார். 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 72):
மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோஎன்று
குழகாகியதம் கோலமெதிர் காட்டியருளக் குறித்துணர்ந்து
நிழலார் சோலைக் கரைப்பொன்னி வடபாலேறி நெடுமாடம்
அழகார் வீதி மழபாடி அணைந்தார் நம்பியாரூரர்.

சுந்தரர் உளம் நெகிழ்ந்து, மழபாடி தலத்திற்குச் சென்று, கண்ணருவி பாய, உச்சி கூப்பிய கையினராய், 'உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே' எனும் பாமாலையால் பணிந்தேத்துகின்றார், 

(சுந்தரர் தேவாரம் - திருமழபாடி - திருப்பாடல் 1)
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே

No comments:

Post a Comment