சுந்தரர் (திருவாரூருக்கு அருகிலுள்ள) நன்னிலத்தில் எழுந்தருளியுள்ள மதுவனேஸ்வரப் பரம்பொருளைத் தரிசித்துப் போற்றி அங்குள்ள திருமடமொன்றில் தங்கியிருக்கின்றார். திருவீழிமிழலை வாழ் அந்தணர்கள், வீழிமிழலையிலிருந்து நன்னிலம் வரையிலான பாதை முழுமைக்கும் (சுமார் 12 கி.மீ) நடைப்பாவாடையிட்டு, இருமருங்கிலும் ஆங்காங்கே வாழை;கமுகுகளை நிரைநிரையாக நாட்டி, தோரணங்களால் அலங்கரித்துப் பின் நன்னிலத்தில் தம்பிரான் தோழரை எதிர்கொண்டு வணங்கிப் போற்றியவாறு வீழிமிழலைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 57):
பாடிஅங்கு வைகியபின் பரமர் வீழி மிழலையினில்
நீடு மறையால் மேம்பட்ட அந்தணாளர் நிறைந்தீண்டி
நாடு மகிழ அவ்வளவும் நடைக்காவணம் பாவாடையுடன்
மாடு கதலி பூகநிரை மல்க மணித்தோரண நிரைத்து
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 58):
வந்து நம்பி தம்மை எதிர்கொண்டு புக்கார் மற்றவரும்
சிந்தை மலர்ந்து திருவீழிமிழலை இறைஞ்சிச் சேண்விசும்பின்
முந்தை இழிந்த மொய்யொளிசேர் கோயில்தன்னை முன்வணங்கிப்
பந்தமறுக்கும் தம்பெருமான் பாதம் பரவிப் பணிகின்றார்.
(சுந்தரர் தேவாரம்: திருவீழிமிழலை: திருப்பாடல் 1):
நம்பினார்க்கருள் செய்யும் அந்தணர் நான்மறைக்கிடமாய வேள்வியுள்
செம்பொனேர் மடவாரணி பெற்ற திருமிழலை
உம்பரார் தொழுதேத்த மாமலையாளொடும் உடனே உறைவிடம்
அம்பொன் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே

No comments:
Post a Comment