சுந்தரர் (திருவாரூரில் இறைவர் ஆணையாலோர் அற்புத வரவேற்பு):

சுந்தரர் முதன் முதலில் திருவாரூருக்குப் பயணித்துச் செல்லுகையில், அடியவர்களை வரிசைப்படுத்தித் தொகுக்கும் ஒப்புமையில்லா 'திருத்தொண்டர் தொகையினை' நம் சுந்தரனார் பாடவிருக்கும திருத்தலமாதலால், தியாகேசப் பரம்பொருள் ஆரூர் அன்பர்களின் கனவில் தோன்றி 'ஆராத காதலால் நாமழைக்க வரும் ஆரூரனை மகிழ்வுடன் சென்று எதிர்கொள்வீர்' என்று கட்டளையிட்டு அருள் புரிகின்றார். 

துயிலெழும் அன்பர்கள், 'தனிப்பெரும் தெய்வமான ஆரூர் இறையவரே இவ்விதம் எழுந்தருளி வந்து திருத்தொண்டர் ஒருவரை எதிர்கொள்ளுமாறு அருளுவாராயின் இனி அச்சுந்தரனாரே நாம் போற்றித் தொழுதற்குரிய தலைவராவார்' என்று வியந்து போற்றி, விண்ணுலகமே இறங்கி வந்ததென்று எண்ணுமாற் போல் நகரினை அலங்கரித்துச் சென்று எதிர்கொண்டு வணங்க, சுந்தரரும் அத்திருக்கூட்டத்தினரை வணங்கி மகிழ்கின்றார்.

No comments:

Post a Comment