சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும், காவிரியின் பெருவெள்ளப் பெருக்கினால் வட கரையிலுள்ள திருவையாற்றினை அடைய இயலாது தடையுற்றிருக்க, சுந்தரர் 'பரவும் பரிசொன்றறியேன்' எனும் திருப்பதிகத்தினால் ஐயாறுறைப் பரம்பொருளிடம் விண்ணப்பித்துப் பாடும் திருக்காட்சி,
பரவும் பரிசொன்றறியேன் நான் பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன்நான்
கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கம் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறுடைய அடிகேளோ
No comments:
Post a Comment