சுந்தரர் (பண்மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் எனக்கும்):

('பத்தூர் புக்கிரந்துண்டு' என்று துவங்கும் திருநாகைக்காரோண தேவாரத்தின் இறுதித் திருப்பாடல்)

பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்
பற்றாய பெருமானே மற்றாரை உடையேன்
உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்
ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவும்
கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டும் 
கடல்நாகைக் காரோண மேவியிருந்தீர்!என்
றண்மயத்தால் அணிநாவல் ஆரூரன் சொன்ன
அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள்பவரே!!!

No comments:

Post a Comment