நாகப்பட்டின மாவட்டத்தில், காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது திருமறைக்காடு (வேதாரண்ய ஷேத்திரம்). இங்கு வேதாரண்யேஸ்வரப் பரம்பொருள் சிவலிங்கத் திருமேனியிலும், அதன் பின்னே அம்மையோடு கூடிய உருவத் திருமேனியிலும் அற்புதத் தன்மையில் எழுந்தருளி இருக்கின்றார்.
(1)
சம்பந்தப் பெருமானாரும் நாவுக்கரசு சுவாமிகளும் தல யாத்திரையாய்ச் செல்லும் வழியில் இத்தலத்திற்கு வருகை புரிகின்றனர். இங்கு பன்னெடும் காலமாய் வேதங்களால் திருக்காப்பிடப் பெற்றிருந்த பிரதான கோபுர வாயிலைத் திறப்பிக்குமாறு அப்பர் சுவாமிகள் இறைவரிடம் விண்ணப்பித்து திருப்பதிகமொன்றினை அருளிச் செய்கின்றார்.
(2)
பின்னர் அவ்வாயிலின் வழியே இருபெரும் குருநாதர்களும் உச்சி கூப்பிய கையினராய் ஆலயத்துள் செல்கின்றனர். மூலக் கருவறையில் தாயினும் இனிய வேதவனப் பரம்பொருளைத் தரிசிக்கின்றனர், கண்களிலிருந்து அருவியாய் நீர் பெருகியோட, மேனி விதிர்விதிர்த்த நிலையில் நிலத்தில் திருமேனி பொருந்துமாறு விரைந்து வீழ்ந்து வணங்குகின்றனர்,
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 584):
கோயிலுள் புகுவார் உச்சி குவித்த செங்கைகளோடும்
தாயினும் இனிய தங்கள் தம்பிரானாரைக் கண்டார்
பாயுநீர் அருவி கண்கள் தூங்கிடப் படியின் மீது
மேயின மெய்யராகி விதிர்ப்புற்று விரைவில் வீழ்ந்தார்
(3)
எல்லையில்லாத அன்பு மேலிடச் சிவானந்த வெள்ளத்தில் மூழ்குகின்றனர். உளமெலாம் நெகிழ்ந்து, எலும்புகளும் உருகுமாறு அம்மையப்பரைத் தரிசித்து, மீண்டும் மீண்டும் வீழ்ந்து பணிவதும் எழுவதுமாய், அதீத நெகிழ்ச்சியினால் நிற்கவும் இயலாமல், மொழிகள் தடுமாறிய நிலையிலேயே பாமாலைகளால் போற்றி செய்கின்றனர்,
(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 585):
அன்பினுக்களவு காணார் ஆனந்த வெள்ளம் மூழ்கி
என்பு நெக்குருக நோக்கி இறைஞ்சிநேர் விழுந்த நம்பர்
முன்பு நிற்பதுவும் ஆற்றார் மொழி தடுமாற ஏத்தி
மின்புரை சடையார் தம்மைப் பதிகங்கள் விளம்பிப் போந்தார்
(4)
எத்தகு உன்னதமான அனுபவம், இறைவரிடத்து கொள்ளும் அன்பின் அதீத முதிர்வே இத்தகைய பக்தி, சிவஞானப் பெருநிலையில் நின்றிருந்தும் இப்பெருமக்கள் எவ்விதம் உருகி உருகி வழிபடுகின்றனர் என்று எண்ணுந்தோறும் உள்ளம் நெகிழுமன்றோ! கல்லைப் பிசைந்து கனியாக்கி என்று இதனையே நம் மணிவாசகப் பெருந்தகையார் போற்றுகின்றார்.
ஆலயங்களில் வழிபடும் பொழுது, இப்பெருமக்களின் தரிசன அனுபவத்தில், கோடியில் ஒரு பங்கேனும் நமக்கு சித்திக்க வேண்டும் என்பதே நம்முடைய விண்ணப்பமாக இருத்தல் வேண்டும்.

No comments:
Post a Comment