சுந்தரர் (சீர்காழி எல்லையில் கயிலைத் திருக்கோலக் காட்சி):
சுந்தரர், திருவாரூர் செல்லும் வழியில் சீர்காழி தலத்தின் எல்லையை அடைகின்றார். திருஞானசம்பந்தர் பேரருள் பெற்றுள்ள புண்ணியப் பதி ஆதலின் அதனுள் பாதம் பதிக்கவும் அஞ்சி, எல்லையை வணங்கியவாறு வலமாகச் செல்லுகையில், அம்பிகை பாகத்து அண்ணலான திருத்தோணிபுர இறைவர் எதிர்க்காட்சி தந்தருள் புரிகின்றார்,
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 258):
பிள்ளையார் திருவவதாரம்செய்த பெரும்புகலி
உள்ளுநான் மிதியேன் என்றூர்எல்லைப் புறம்வணங்கி
வள்ளலார் வலமாக வரும்பொழுதின் மங்கையிடம்
கொள்ளு மால்விடையானும் எதிர்காட்சி கொடுத்தருள
அகம் குளிர்ந்து, பெருகும் காதலுடன், கண்ணருவி பாய, உச்சி கூப்பிய கையினராய் உமையொரு பாகனாரைப் பணிந்து, 'திருத்தோணிபுரப் பெருமானைத் திருக்கயிலையில் எழுந்தருளியிருக்கும் திருக்கோலத்தில் இவ்விடத்தே கண்டு கொண்டேன்' என்று தீந்தமிழ்ப் பனுவலால் போற்றிப் பரவுகின்றார்,
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 259):
மண்டிய பேரன்பினால் வன்தொண்டர் நின்றிறைஞ்சித்
தெண்திரைவேலையில் மிதந்த திருத்தோணிபுரத்தாரைக்
கண்டுகொண்டேன் கயிலையினில் வீற்றிருந்த படியென்று
பண்டரும் இன்னிசைபயின்ற திருப்பதிகம் பாடினார்
(சுந்தரர் தேவாரம் - திருக்கழுமலம் - திருப்பாடல் 1)
சாதலும் பிறத்தலும் தவிர்த்தெனை வகுத்துத்
தன்னருள் தந்த எம்தலைவனை, மலையின்
மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை,
வருபுனல் சடையிடை வைத்த எம்மானை,
ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை,
எண்வகை ஒருவனை, எங்கள் பிரானை,
காதில் வெண்குழையனைக் கடல்கொள மிதந்த
கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே!!

சுந்தரர் (மூவேந்தருடன் மும்முறை மேற்கொண்ட திருத்தல யாத்திரை):
சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாருடன் பல்வேறு திருத்தலங்களைத் தரிசித்துப் பரவியவாறே மதுரை மாநகரைச் சென்றடைகின்றனர். பாண்டிய மன்னர் இரு அருளாளர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு வரவேற்கின்றார். பாண்டிய மன்னரின் மகளாரை மணந்திருந்த சோழ மன்னரும் அச்சமயத்தில் அங்கிருக்க, மூவேந்தருடனும் சுந்தரர் ஆலவாய்த் திருக்கோயிலுள் சொக்கநாதப் பரம்பொருளைத் தரிசித்துப் பணிகின்றார்.
பாண்டிய வேந்தரின் உபசரிப்பினை ஏற்றுச் சில தினங்கள் அவர்தம் அரண்மனையில் தங்கியிருந்துப் பின்னர் மூவேந்தருடனும் சுந்தரனார் திருப்பூவணம் எனும் தலத்தினைத் தரிசித்துப் பின் மதுரைக்கு மீள்கின்றார். பின்னர் 2ஆம் யாத்திரையாக, வேந்தர் மூவருடனும் திருஆப்பனூர்; திருவேடகம் முதலான தலங்களைத் தரிசித்துப் பின் மீண்டும் மதுரைக்கு எழுந்தருளி வருகின்றார். பின்னர் சில தினங்களிலேயே 3ஆம் முறையாக, சேர; சோழ; பாண்டியருடன் திருப்பரங்குன்றம் சென்று தொழுகின்றார்.
'கோத்திட்டையும் கோவலும் கோயில்கொண்டீர்' என்று துவங்கும் திருப்பதிகத்தினால் பணிந்தேத்தி, 'அடிகேள் உமக்காட்செய அஞ்சுதுமே' என்று போற்றுகின்றார். இறுதித் திருப்பாடலில், மூவேந்தருடன் இத்தல தரிசனத்தை மேற்கொண்டதற்கான அகச் சான்றினைப் பதிவு செய்கின்றார்,
(சுந்தரர் தேவாரம் - திருப்பரங்குன்றம் - திருப்பாடல் 11)
அடிகேள் உமக்காட்செய அஞ்சுதுமென்றமரர் பெருமானை ஆரூரன்அஞ்சி
முடியால் உலகாண்ட மூவேந்தர்முன்னே மொழிந்தாறுமோர் நான்குமோர் ஒன்றினையும்
படியாஇவை கற்று வல்லவடியார் பரங்குன்ற மேய பரமன் அடிக்கே
குடியாகி வானோர்க்கும் ஓர் கோவுமாகிக் குலவேந்தராய் விண் முழுதாள்பவரே!!!
சேரமான் பெருமாள் நாயனாரும்; மற்றுமுள்ள இரு தேச வேந்தர்களும், சுந்தரனாரின் இவ்வற்புதப் பனுவலைச் செவியுற்று, 'இறைவற்குத் திருத்தொண்டாற்றும் மேன்மை இத்தன்மையதோ?' என்று திருத்தொண்டின் அருமைப்பாட்டினை உள்ளவாறு உணர்ந்து அஞ்சி வன்தொண்டரின் திருவடி தொழுதுப் போற்றுகின்றனராம்,
(கழறிற்றறிவார் புராணம் - திருப்பாடல் 104)
இறைவர் திருத்தொண்டுபுரி அருமையினை இருநிலத்து
முறைபுரியும் முதல்வேந்தர் மூவர்களும் கேட்டஞ்சி
மறைமுந்நூல் மணிமார்பின் வன்தொண்டர் தமைப்பணிந்தார்
நிறைதவத்தோர் அப்பாலும் நிருத்தர்பதி தொழநினைந்தார்
இங்கிருந்து பாண்டிய; சோழ மன்னர்கள் திருத்தொண்டர் இருவரிடமும் விடைபெற்று மதுரைக்குத் திரும்பிச் செல்ல, நம் சுந்தரனார் தம்முடைய தோழராகிய சேரமான் நாயனாருடன் திருத்தல யாத்திரையை மேலும் தொடர்கின்றார்.

சுந்தரர் (கண்பார்வை மறைந்த காலடிப்பேட்டை):
சுந்தரர் திருவாரூர் தியாகேசப் பரம்பொருளைத் தரிசிக்கும் பெரும் காதலால், ஒற்றியூர் திருக்கோயிலில் சங்கிலியாருக்கு 'இவ்விடம் விட்டு அகலேன்' என்று அளித்திருந்த வாக்கினை மீறி, ஒற்றியூர் எல்லையைத் தாண்டும் மறுகணமே வன்தொண்டரின் கண்மலர்கள் இரண்டும் திருவருளால் மறைப்பிக்கப் பெறுகின்றன. இக்காரணத்தால் இவ்விடம் 'காலடிப்பேட்டை' என்று இன்று வரையிலும் வழங்கப் பெற்று வருகின்றது (உள்ளூர் வழக்கில் என்பதோடல்லாமல், கூகுள் வரைபடமும் 'Kaladipet' எனும் இப்பகுதியை மிகத் தெளிவாகச் சுட்டுகின்றது).
சிவபெருமான்; அம்பிகையோடு சரவணப் பொய்கைக்குச் சென்ற சுந்தரமூர்த்தி நாயனார் (கந்தபுராணம் விவரிக்கும் அரிய நிகழ்வு):
முருகப் பெருமானின் திருஅவதாரம் இமயத்திலுள்ள சரவணப் பொய்கையில் நிகழ்ந்தேறிய பிறகு, கார்த்திகைப் பெண்களால் சிறிது காலம் வளர்க்கப் பெற்று வருகின்றார். பின்னர் சிவபெருமான் உமாதேவியாரோடு குமாரக் கடவுளைத் திருக்கயிலைக்கு அழைத்துச் செல்லும் பொருட்டு அப்பொய்கைக்கு நேரில் எழுந்தருளி வருகின்றார். அச்சமயத்தில் உடன் சென்ற எண்ணிறந்தோரைப் பட்டியலிடுகையில், நம் ஆலால சுந்தரரையே கச்சியப்ப சிவாச்சாரியார் முதலாவதாகக் குறிக்கின்றார் (இது ஆலால சுந்தரர் நம்பியாரூரராக திருநாவலூரில் அவதரிப்பதற்கு எண்ணில் கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட புராண கால நிகழ்வு),
பின்வரும் திருப்பாடலில், 'பாற்கடல் கடைந்த சமயத்தில், எல்லையில்லாது எழுந்த ஆலகால விஷத்தினைத் தம்முடைய கரத்தினில் அடக்கிச் சென்று சிவபெருமானிடம் அளித்த ஆலால சுந்தரர் மற்றுமுள்ள உருத்திர கணங்கள் யாவரும் இருமருங்கிலும் சூழ்ந்திருந்து போற்றியவாறு உடன் சென்றனர்' என்று பதிவு செய்கின்றார் கச்சியப்ப சிவாச்சாரியார்,
(உற்பத்தி காண்டம் - சரவணப் படலம் - திருப்பாடல் 7)
அந்தமில் விடத்தினை அடக்கு கையுடைச்
சுந்தரன் ஆதியாம் தொல் கணத்தினோர்
எந்தைதன் உருவு கொண்டிருந்த மேலவர்
வந்திரு மருங்குமாய் வழுத்தி ஈண்டினார்
'முருகப் பெருமானை முதன்முதலில் இறைவர்; இறைவியோடு சென்று நம் சுந்தரர் தரிசித்துள்ளார்' எனும் குறிப்பு எவ்வளவு இனிமையானது (வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி)!!!
ஆலகால விடத்தைக் கையிலெடுத்துக் கொணர்ந்த ஆலால சுந்தரர் (கந்தபுராணம் விவரிக்கும் அற்புத நிகழ்வு):
'நம் சுந்தரனார், பாற்கடல் கடையும் நிகழ்வு சமயத்தில் வெளிப்பட்டெழுந்த ஆலகால விடத்தை, சிவபெருமானின் ஆணையினால், தம்முடைய கரங்களில் ஏந்திக் கொணர்ந்து சிவமூர்த்தியிடம் அளித்ததாக' பல்வேறு ஆன்மீக விரிவுரைகளிலும், வலைத்தளங்களிலும், முகநூல் பதிவுகளிலும் கேட்டும் படித்துமிருப்போம்.
எனினும் பெரியபுராணமோ சுந்தரரின் வரலாற்றினை, 'ஆலால சுந்தரர் திருக்கயிலையில் சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டு புரிந்து வருகின்றார்' எனும் இடத்திலிருந்தே விவரிக்கத் துவங்குகின்றது. எனில், 'மேற்குறித்துள்ள நிகழ்விற்கு அகச்சான்றுகள் தான் என்ன?' என்று பெரிதும் ஏங்கித் தவித்திருப்போருக்குத் தம்முடைய தேனினும் இனிய கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாக நம் கச்சியப்ப சிவாச்சாரியார் விடை பகர்கின்றார்,
கீழ்க்குறித்துள்ள திருப்பாடலின் இறுதி இரு வரிகளில் சிவபரம்பொருள் தம்மருகே நின்றிருக்கும் அணுக்கத் தொண்டரான நம் சுந்தரரைப் பார்த்து, 'அக்கொடிய விடத்தை இவ்விடத்தே கொண்டு வருக' என்று பணித்து அருள் புரிகின்றார்,
-
(தக்ஷ காண்டம்: ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 353)
வண்டமர் குழலெம் அன்னை மற்றிவை இசைத்தலோடும்
அண்டரு மகிழ்ச்சி எய்தி ஆதியம் கடவுள் தன்பால்
தொண்டு செய்தொழுகுகின்ற சுந்தரன் தன்னை நோக்கிக்
கொண்டிவண் வருதியால் அக்கொடுவிடம் தன்னை என்றான்
நம் சுந்தரனார், முப்பத்து முக்கோடி தேவர்களையும் தகித்துப் பதற வைத்த, இன்னதென்று கூற இயலாத தன்மையில் விண்ணுக்கும் மண்ணுக்குமாய்ப் பெருகியிருந்த அக்கொடிய ஆலகால விடத்தைத் திருவருளின் துணை கொண்டு, தம்முடைய கரங்களில் சிறு நாவல்பழம் போலும் திரட்டிக் கொணர்ந்து சிவபெருமானிடம் அளித்துப் பணிகின்றார்,
-
(தக்ஷ காண்டம்: ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 354)
என்றலும் இனிதே என்னா இறைஞ்சினன் ஏகி யாண்டும்
துன்றிய விடத்தைப் பற்றிச் சுந்தரன் கொடு வந்துய்ப்ப
ஒன்றொரு திவலையே போல் ஒடுங்குற மலர்க்கை வாங்கி
நின்றிடும் அமரர் தம்மை நோக்கியே நிமலன் சொல்வான்
*
ஆலகால விடத்தை ஏந்திக் கொணர்ந்த காரணத்தால் அதுமுதல் 'ஆலால சுந்தரர்' எனும் திருநாமத்தாலும் நம் சுந்தரனார் குறிக்கப் பெற்று வருகின்றார் (வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி)!!!
திருக்கயிலையில் நடந்தேறிய சூதாட்ட நிகழ்வும், ஆலால சுந்தரரும் (கந்தபுராணம் விவரிக்கும் அரியதொரு நிகழ்வு):
திருக்கயிலையில் ஆதிப்பரம்பொருளான சிவமூர்த்தி திருவிளையாடல் ஒன்றினைப் புரிந்தருளும் திருவுள்ளக் குறிப்புடன் உமையன்னையை நோக்கி, 'நீ நம்முடன் சூதாட்டம் விளையாடுவாயாக, நீ தோல்வியுற்றால் உன்னுடைய ஆபரணங்கள் அனைத்தையும் நீ தந்திடல் வேண்டும், நாம் தோற்பின் நம் முடியிலுள்ள பிறைச் சந்திரன் உள்ளிட்ட ஆபரணங்கள் யாவையும் உனக்குத் தருவோம்' என்றருளிச் செய்கின்றார் (திருமேனி எங்கிலும் அலங்கரிக்கும் நாகாபரணங்களையே தம்முடைய அணிகலன்கள் என்று இறைவர் குறிக்கின்றார் போலும்).
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 161)
சூதனை எம்மொடே பொருதி தோற்றனை
ஆதியேல் நீபுனை அணிகள் யாவையும்
ஈதியால் வென்றனை என்னின் எம்மொரு
பாதியாம் சசிமுதல் பலவும் கோடியால்
உலகீன்ற உமையவளும் இறைவரின் கருத்திற்கு இசைவு தெரிவிக்க, முக்கண் முதல்வரும் அச்சமயத்தில் அருகிருந்த வைகுந்த வாசனாரை நோக்கி 'பரந்தாமா! இவ்விளையாட்டிற்குச் சாட்சியாக பொருத்தமுற விளங்கியிருப்பாய்' என்று நியமிக்கின்றார்,
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 162)
என்னலும் உமையவள் இசைவு கோடலும்
அன்னதொர் எல்லையில் அரியை நோக்கியே
தன்னிகர் இல்லவன் இதற்குச் சான்றென
மன்னினை இருத்தியான் மாயநீ என்றான்
இத்திருவிளையாடலைத் தொடர்ந்து விரிவாகக் காண்பது இப்பதிவின் நோக்கமன்று, 'இந்நிகழ்வினில் நம் தலைவரான ஆலால சுந்தரர் இடம்பெறுகின்ற சுவையான குறிப்பொன்றினை வெளிக்கொணரவே' இப்பதிவு.
பின்வரும் திருப்பாடலில் 'சுந்தரர் முதலாகவுள்ள அணுக்கத் தொண்டு புரிந்து வருவோர், சிவபெருமானின் கட்டளையினைச் சிரமேற் கொண்டு, அங்கு பலகைகள் உள்ளிட்ட சூதாடு கருவிகளை முறைப்படி கொணர்ந்து வைக்கின்றனர்' என்று கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார்.
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 183)
இந்தவாறாயிடை நிகழும் எல்லையில்
சுந்தரன் முதலிய உழையர் சுற்றினோர்
அந்தமில் பெருங்குணத்து ஆதி ஏவலில்
தந்தனர் காசொடு பலகை தன்னையே
பொதுவில் பெரிய புராண நிகழ்வுகளின் மூலமாக மட்டுமே 'சுந்தரரின் ஏற்றமிகு சிறப்பினை' அறிந்துணர்ந்து மகிழ்ந்திருக்கும் அன்பர்களுக்கு, பிற சைவ புராணங்களிலும் திருமுறைகளிலும் நம் சுந்தரர் தொடர்பாக இடம்பெறும் சிறியதொரு குறிப்பும் வியப்பூட்டுவதாகவும், உள்ளத்திற்கு பெரும் இனிமையைக் கூட்டுவதாகவும் விளங்கி வருகின்றது.

Subscribe to:
Posts (Atom)